குப்புற கவிழ்ந்த டேங்கர் லாரி

by Staff / 26-01-2023 03:13:53pm
குப்புற கவிழ்ந்த டேங்கர் லாரி

ஆக்ராவில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலை விபத்தில் சிக்கியது. தேசிய நெடுஞ்சாலையில் இந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது. மேலும் அங்கிருந்த வீட்டில் மோதியதில் அந்த வீடு இடிந்து விழுந்தது. விபத்துக்குப் பிறகு, டேங்கரில் இருந்து எரிவாயு கசியத் தொடங்கியது. இதனால் அருகில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via