12 வயது இளம் இயக்குனரின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு

by Editor / 11-09-2021 07:56:31pm
12 வயது இளம் இயக்குனரின்  டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு

12 வயதான இளம் இயக்குனர் சிறுவன் மாஸ்டர் ஆஷிக் ஜீனு இதுவரை ஆறு குறும்படங்கள் ஒரு ஆவணப்படம் இரண்டு வணிக ரீதியிலான படங்களை இயக்கியிருக்கிறார் சிறுவன் இயக்கிய முதல் குறும்படமான பிடிகா கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு படமாக பேசப்பட்டுள்ளன. இளம் இயக்குனர்களுக்கு இந்திய அளவிலான யுனிவர்சல் ரெக்கார்ட் போரம் விருதையும் பெற்றது அதே போன்று பசி என்ற குறும்படம் சிறந்த குறும்பட இயக்குனருக்கான 2020 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது இந்த சிறுவன் ஊரடங்கு சமயத்தில் இயக்கிய தி ரூல் ஆஃப் பீஸ் என்கின்ற வருமான மாற்றம் படத்தில் சிறந்த ஊரடங்கு திரைப்படத்திற்கான இன்டர்நேஷனல் விருது கிடைத்திருக்கிறது ஆறு குறும்படங்களில் மூன்று படங்கள் சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் 5 இன்டர்நேஷனல் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது இந்த சிறுவன் தி கொலம்பியன் அகடமி என்ற வணிக ரீதியிலான முதல் படத்தை இயக்கி இருக்கக் கூடிய நிலையில் இரண்டாவது திரைப்படமாக ஈவிஏ எனும் திரைப்படத்தை தமிழில் வெளியிட இருக்கிறார் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் திருநெல்வேலியில் இன்று வெளியிடப்பட்டது இதை வெளியிட்ட இளம் இயக்குனர் சிறுவன் மாஸ்டர் ஆஷிக் ஜீனு எதிர்காலத்தில் சிறந்த இயக்குனர்களாக வரவேண்டும் என்றும் நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via