கொரோனா :முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்' - மு.க.ஸ்டாலின்

by Editor / 20-04-2021 08:56:46pm
கொரோனா :முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்' - மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ''சகோதரர் ராகுல்காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட ராகுல்காந்தி விரைந்து நலம்பெற வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என திமுக தலைவர் ஸ்டாலின். வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

Tags :

Share via