விருதுகளை அள்ளிய அசுரன்

by Editor / 19-09-2021 09:42:58pm
விருதுகளை அள்ளிய அசுரன்

2020- 2021 ம் ஆண்டிற்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளான SIIMA விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய இவ்விழா கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. விருது பெற்றவர்களின் முழு விபரம்.

தமிழ் :

சிறந்த டைரக்டர் - வெற்றிமாறன் (அசுரன்)

சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)

சிறந்த வில்லன் - அர்ஜுன் தாஸ் (கைதி)

சிறந்த துணை நடிகர் - ஜார்ஜ் மரியன் (கைதி)

சிறந்த துணை நடிகை - இந்துஜா ரவிச்சந்திரன் (மகாமுனி)

சிறந்த அறிமுக இயக்குனர் - பிரதீப் ரங்கநாதன் (கோமாளி)

சிறந்த புதுமுக நடிகர் - கென் கருணாஸ் (அசுரன்)

சிறந்த புதுமுக தயாரிப்பாளர் - வி ஸ்டூடியோஸ் (ஆடை)

சிறந்த பின்னணி பாடகி - சைந்தவி பிரகாஷ் (அசுரன்)

சிறந்த பாடலாசிரியர் - விவேக் (சிங்கப் பெண்ணே - பிகில்)

சிறந்த நடன இயக்குனர் - வேல் ராஜ் (அசுரன்)

சிறந்த படம் - கைதி

தெலுங்கு :

சிறந்த நடிகர் - நானி (Gang Leader)

சிறந்த டைரக்டர் - வம்சி (மகரிஷி)

சிறந்த வில்லன் - கார்த்திகேயா (Gang Leader)

சிறந்த காமெடி நடிகர் - அஜய் கோஷ் (ராஜு காரு காதி 3)

சிறந்த என்டர்டைனர் - அஜில் ரவிபுடி (F2)

சிறந்த என்டர்டைனர் - நானி (ஜெர்சி, Gang Leader)

சிறந்த துணை நடிகர் - அல்லரி நரேஷ் (மகரிஷி)

சிறந்த துணை நடிகை - காருன்யா ராம் (Mane Maratakkide)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ஸ்ரீபதா (பிரியத்தமா பிரியத்தமா)

சிறந்த அறிமுக இயக்குனர் - ஸ்வரூப் ஆர்எஸ்ஜெ (ஏஜன்ட் சாய் ஸ்ரீநிவாசா அத்ரியா)

சிறந்த புதுமுக நடிகர் - ஸ்ரீ சிம்ஹா (மது வடலரா)

சிறந்த புதுமுக நடிகை - சிவாத்மிகா ராஜசேகர் (Dorasani)

சிறந்த புதுமுக தயாரிப்பாளர் - ஸ்டூடியோ 99 (Mallesham)

சிறந்த இசையமைப்பாளர் - டிஎஸ்பி (மகரிஷி)

சிறந்த பின்னணி பாடகர் - அனுராக் குல்கர்னி (Ismart Shankar title track)

சிறந்த ஹீரோ - மகேஷ் பாபு (மகரிஷி)

சிறந்த ஹீரோயின் - ராஷ்மிகா மந்தனா (Dear Comrade)

சிறந்த பாடலாசிரியர் - ஸ்ரீ மணி (மகரிஷி)

சிறந்த படம் - ஜெர்சி

கன்னடம் :

சிறந்த நடிகர் - ரக்ஷித் ஷெட்டி (Critics, Avane sriman Narayana)

சிறந்த நடிகை - ரஷிதா ராம் (ஆயுஷ்மான்பவ)

சிறந்த வில்லன் - சாய்குமார் பி (Bharaate)

சிறந்த டைரக்டர் - ஹரி கிருஷ்ணா, பொன் குமரன் (Yajamana)

சிறந்த காமெடி நடிகர் - சாது கோகிலா (Yajamana)

சிறந்த துணை நடிகர் - தேவராஜ் (Yajamana)

சிறந்த அறிமுக இயக்குனர் - ஆர்ஜே மயூரா (Gottilla)

சிறந்த புதுமுக நடிகர் - அபிஷேக் கவுடா (அமர்)

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - Coastal Breeze productions

சிறந்த இசையமைப்பாளர் - வி.ஹரிகிருஷ்ணா (Yajamana)

சிறந்த நடன அமைப்பாளர் - இம்ரன் சர்தாரியா (அவனே ஸ்ரீமன்நாராயணா)

சிறந்த பின்னணி பாடகி - அனன்யா பட் (கீதா)

சிறந்த பாடலாசிரியர் - பவன் வாண்டையர் (Natasaarvabhowma டைட்டில் பாடல்)

சிறந்த ஹீரோ - தர்ஷன் (Yajamana)

சிறந்த படம் - Yajamana

மலையாளம் :

சிறந்த வில்லன் - ஷைன் டாம் சாகோ (Ishq)

சிறந்த டைரக்டர் - Lijo Jose pellissery (ஜல்லிக்கட்டு)

சிறந்த காமெடி நடிகர் - பசில் ஜோசப் (Kettiyolaanu Ente Malakha)

சிறந்த துணை நடிகர் - ரோஷன் மோத்திவ் (Moothon)

சிறந்த துணை நடிகை - சானியா ஐயப்பன் (லூசிஃபர்)

சிறந்த புதுமுக நடிகை - அண்ணா பென் (Kumbalangi Nights)

சிறந்த புதுமுக தயாரிப்பாளர் - Scube Films (Uyare)

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிசங்கர் கேஎஸ், பவிழா மழா (அதிரன்)

சிறந்த பின்னணி பாடகி - பிரார்த்தனா (Helen)

சிறந்த பாடலாசிரியர் - விநாயக் சசிகுமார் (அம்பிலி)

சிறந்த படம் - லூசிஃபர்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ஷீலா

 

Tags :

Share via