குழந்தை திருமணம் செய்ய அனுமதி:புதிய சட்டம்

by Editor / 21-09-2021 01:05:13pm
குழந்தை திருமணம் செய்ய அனுமதி:புதிய சட்டம்

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் கட்டாய திருமண பதிவுச் சட்டம் 2009 திருத்தி.. கட்டாய திருமண பதிவுச் சட்டம் 2021- ஐ நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை கேள்வி எழுப்பினர். மேலும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். இருப்பினும், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியது.

இதையடுத்து, பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்து பேரவையை விட்டு வெளியேறினர். பின்னர் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்டசபைக்கு இது ஒரு கருப்பு நாளாக இருக்கும். குழந்தை திருமணங்களை ஒருமனதாக அனுமதிக்க சட்டமன்றம் அனுமதிக்கிறதா..? கை கட்டி, நாங்கள் குழந்தை திருமணங்களை அனுமதித்து வேடிக்கை பார்க்க மாட்டோம். இந்த மசோதா சட்டசபை வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை எழுதும் "என்று பாஜக எம்எல்ஏ அசோக் லஹோடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via