ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் பார்சலை திறந்தபோது ஒரு மூட்டை கழிவு காகிதம்

by Editor / 25-09-2021 11:00:45am
ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர்  பார்சலை திறந்தபோது ஒரு மூட்டை கழிவு காகிதம்

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு மூட்டை கழிவு காகிதம் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜூன் மாதம் அமேசான் மூலம் மடிக்கணினி ஒன்றை முன்பதிவு செய்தார். இதில் தாயின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டது. பார்சல் ஒரு வாரத்திற்குள் வந்தது. மாணவி பார்சலை திறந்தபோது கழித்தாள் மட்டுமே இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பார்சலை திறக்கும் வீடியோ படமாக்கப்பட்டது. வீடியோ பதிவுடன் அமேசானில் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் அந்த மாணவி மாவட்ட காவல்துறை தலைவரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் ஆலுவா சைபர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. மடிக்கணினி ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் அமேசானுக்கு வழங்கப்பட்டது என்பதை கண்காணிப்புக்குழு கண்டுபிடித்தது. இந்நிறுவனம் வேளாண் மூலிகை தொடர்பான பொருட்களை விற்கும் நிறுவனம் என்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு காவல்துறையினர் மாணவியிடம் பெறப்பட்ட தொகையை திரும்ப வாங்கி கொடுத்தனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via