மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்

by Editor / 28-09-2021 11:53:31am
மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின்

மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதைத்தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி தென் சென்னை பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர் , புழல் உபரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின், கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.இதனிடையே சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள ஸ்டாலின் நாளை வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து சிறு, குறு நடுத்தர தொழில் துறையினர் மற்றும் விசைத்தறி சமூகத்தினருடன் கலந்தாலோசிக்கிறார். நாளை மறுதினம் தர்மபுரிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஒகேனக்கல் குடிநீர் விநியோக திட்ட பணிகளை பார்வையிட, பழங்குடியின விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

 

Tags :

Share via