மின்சார காரை அறிமுகப்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ்

by Editor / 30-09-2021 11:06:54am
மின்சார காரை அறிமுகப்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ்

மின்சார கார்களை அறிமுக்கப்படுத்தியுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
Spectre என பெயரிடப்பட்ட மின்சார காரிலும் வழக்கமான மாடல்களில் உள்ள சக்தி, ஆடம்பரம் மற்றும் அழகு ஆகியவை உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.எனினும் Spectre-ரின் தொழில்நுட்பம் குறித்தோ, விலை குறித்தோ எந்த தகவலும் அளிக்க இயலாது என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாஸ்டன் முல்லர்-ஓட்வோஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொழில்நுட்ப விவரங்களை இங்கு பேசவில்லை. மீண்டும், நாங்கள் சோதனைத் திட்டத்தை அறிவிப்போம். 2023- ல் சந்தையில் கிடைக்கும். உரிய நேரத்தில் தொழில்நுட்ப விவரங்களை அறிவிப்போம்.

ஆனால் உறுதியாக ரோல்ஸ் ராய்ஸ் என்ற பெயரை பெருமையுடன் எடுத்துச் செல்வோம். 2023- ஆம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸின் மின்சார கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் ஓட்வோஸ் கூறியுள்ளார்.
சூப்பர் சொகுசு கார்களின் வரிசையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே முதல் மின்சார காரை அறிமுகப்படுத்துகிறது. பென்ட்லி மற்றும் ஆஸ்டன் மார்டின் நிறுவனங்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அவை இது வரை முழு முயற்சியில் இறங்கவில்லை.


2030- ஆம் ஆண்டு வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் முழுவதுமாக மின்சார கார்களை மட்டுமே உற்பத்தி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via