'சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்' -சீன அதிபர் ஷி ஜின்பிங்

by Editor / 10-10-2021 10:38:40am
'சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்' -சீன அதிபர் ஷி ஜின்பிங்

தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு மக்களின் கையில்தான் உள்ளது என்று கூறுகிறது.

தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக தன்னைக் கருதுகிறது. ஆனால் தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக சீனா தைவானைப் பார்க்கிறது.

இணைப்புக்காக பலப்பிரயோகம் செய்யும் சாத்தியக்கூறுகளையும் சீனா மறுக்கவில்லை .

சமீப நாட்களில் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனாவின் போர் விமானங்கள் அதிக எண்ணிக்கையில் நுழைந்துள்ளதால் தைவான் மற்றும் சீனா இடையே உரசல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஷி ஜின்பிங்.

 

Tags :

Share via