உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக பிரியங்கா காந்தி நியமனம்

by Editor / 18-10-2021 07:18:47pm
உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக பிரியங்கா காந்தி நியமனம்

. உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டதாக புனியா தெரிவித்தார்.பிரச்சாரக் கமிட்டியில் சோனியா தலைமையில் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள்.
மோசினா கித்வாய், பிரமோத் திவாரி, ராஜ் பப்பர், ஆர் பி என் சிங், நசிமுதீன் சித்திக். இம்ரான் மசூத், இம்ரான் பிரதாப் காரி ஆகியோர் பிரச்சாரக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.


வரும் 2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செயல்படுவார் என்று பி.எல். புனியா தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை கமிட்டி, மற்ற கட்சிகளுடன் தேர்தல் பணிகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு கமிட்டி, தேர்தல் குற்றப்பத்திரிகை கமிட்டி ஆகிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.


உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தனது எதிரியாக கருதுவது காங்கிரஸ் கட்சியை தான் அதனால் எந்த விஷயம் என்றாலும் காங்கிரசை தாக்கி பேசுவதை பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் சமாஜவாதி கட்சியின் பகுஜன் சமாஜ கட்சியின் இப்பொழுது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன கடந்த ஆண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளில் முன்னிருந்து போராடிய காரணத்தினால் பிரியங்கா காந்தி இப்பொழுது முன்னணித் தலைவராக உயர்ந்துள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் விரும்பும் ஒரே தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்.

 

Tags :

Share via