கோப்பையுடன் ஸ்டாலினை சந்திக்கப்போகும் எம்எஸ் தோனி

by Editor / 19-10-2021 10:33:21am
 கோப்பையுடன் ஸ்டாலினை சந்திக்கப்போகும் எம்எஸ் தோனி

சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அற்புதமாக செயல்பட்டது. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியைக் கொண்டாடச் சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திரசிங் தோனி என பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஐபிஎல் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்படும். டி20 உலக கோப்பை முடிந்த பிறகு எம்எஸ் தோனி கோப்பையுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவர் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via