விவசாயிகளின் போராட்டக்களத்தில் மீண்டும் ஒரு விபத்து…  

by Editor / 28-10-2021 04:56:24pm
விவசாயிகளின் போராட்டக்களத்தில் மீண்டும் ஒரு விபத்து…  

 

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடம் அருகே லாரி மோதி 3 பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் மீது கார் மோதியதில் 8 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. விவசாயிகள் மீது காரை ஏற்றியது தொடர்பாக மத்திய இணையமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஹரியானாவில் மத்திய வேளாண் சட்டத்துக்குக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்ட களத்துக்கு மிக அருகில், சாலையின் செண்டர் மீடியன் மீது அமர்ந்திருந்த 3 பெண் விவசாயிகள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அரியானா - டெல்லி எல்லைப் பகுதியில் திக்ரி எல்லை அருகே ஜாஜர் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.அதிகாலை 6.30 மணி அளவில் விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via