வேதாரண்யம் உப்பு சத்யாகிரகம் 91-வது ஆண்டு நினைவு தினம்!

by Editor / 30-04-2021 11:18:28am
வேதாரண்யம் உப்பு சத்யாகிரகம் 91-வது ஆண்டு நினைவு தினம்!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 91-ஆவது ஆண்டு நினைவையொட்டி, அகத்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவு தூண் வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.ஊரடங்கு காரணமாக விரிவான ஏற்பாடுகள் தவிர்க்கப்பட்டது.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930, ஏப்ரல் 30 -ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது.
சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர். இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 -ஆம் தேதி உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். நிகழாண்டுக்கான நிகழ்ச்சி ஊரடங்கு காரணமாக பாதை யாத்திரை உள்ளிட்ட விரிவான நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டது. அகத்தியம்பள்ளியில் உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினருமான பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo