வடமாநிலங்களுக்கு செல்லும் ரயிகள் ரத்து

by Editor / 21-11-2021 02:51:23pm
வடமாநிலங்களுக்கு செல்லும் ரயிகள் ரத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து அந்த பகுதி வழியாக செல்லவேண்டிய கீழ்க்கண்ட தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நவம்பர் 21 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய பைஸாபாத் எக்ஸ்பிரஸ் (22613), புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (20895), மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), நிஜாமுதீன் தமிழ் நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12651), நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் (16352), பெங்களூர் எக்ஸ்பிரஸ் (17235), திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (22620) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மேலும் நவம்பர் 22 அன்று பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (17236) ரயிலும் ரத்து செய்யப்படுகிறது

 

Tags :

Share via