சாலையின் பள்ளத்தை கவுரவம் பார்க்காமல் சரிசெய்த போக்குவரத்து எஸ்.ஐ.

by Editor / 22-11-2021 07:00:18pm
சாலையின் பள்ளத்தை கவுரவம் பார்க்காமல் சரிசெய்த போக்குவரத்து எஸ்.ஐ.

வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்லும் சாலையில் இன்று வாகனங்களின் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 கி.மீ தூரத்துக்கு இரு பக்கமும் வாகனங்கள் அப்படியே நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.இதன்காரணமாக காட்பாடி ரெயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்தின் சாலையின்  

பல இடங்களில் தொடர் மழைகாரணமாக ஆங்காங்கே  பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் தவழ்ந்து செல்லும் நிலை உருவானது.இதனால் நெரிசல் ஏற்பட்டது. மழையம் பெய்ததால் வாகன ஓட்டிகளும்,பொது மக்களும் மிகவும் சிரமம் அடைந்தன்ர்.இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக்கண்டு அங்கு ஓடோடி வந்த காட்பாடி டிராபிக் போலீஸ் எஸ்.ஐ. ஸ்பீடு வெங்கடேசன் என்பவர் வாகன நெரிசலை உடனே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

அங்கு 2 தொழிலாளர்கள் பாலம் விரிசலில் சிமெண்ட் பூசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவரை அழைத்துக் கொண்ட எஸ்.ஐ.,  ரோட்டின் ஓரம் பல மாதமாக சேர்ந்து கிடந்த மணலை, பூச்சுமான கரண்டியால் தானே அள்ளி ஒரு சட்டியில் கொட்டினார். அதை அந்த தொழிலாளி உதவியோடு ரோட்டின் பள்ளத்தில் கொட்டினார். இப்படி அரை மணி நேரம் போக்குவரத்து எஸ்.ஐ. ஒருவர் சாலையை சீரமைக்க கூலி தொழிலாளி போல் பணி செய்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள், எஸ்.ஐ.யின் சமூக சேவையை பார்த்து நெகிழ்ந்து போனார்கள்.

இத்தனைக்கும் எஸ்.ஐ. யூனிபார்ம் அணிந்து ஒருகையில் வாக்கி டாக்கி வைத்தபடி இந்த சேவையை செய்தார். தான் ஒரு எஸ்.ஐ. என்று அவர் கவுரவம்  பார்க்காமல் அவர் அந்த சாலையை தற்காலிகமாக சீரமைத்ததால் சில நிமிடங்களில் 1மணிநேர போக்குவரத்து நெரிசல் சீரானது.அந்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


 

சாலையின் பள்ளத்தை கவுரவம் பார்க்காமல் சரிசெய்த போக்குவரத்து எஸ்.ஐ.
 

Tags :

Share via