தமிழகத்தில் அடியோடு சரியும் கொரோனா பாதிப்பு.தென்காசி மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

by Editor / 11-12-2021 11:25:20am
தமிழகத்தில் அடியோடு சரியும் கொரோனா பாதிப்பு.தென்காசி மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.தினசரி பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கோவை இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட குறைவாகும். 

கொரோனா மொத்த பாதிப்பு 27,34,034 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா உயிரிழப்புகோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,586 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 739 பேர் குணமடைந்துள்ளனர்.

 இதுவரை மொத்தம் 26,89,627 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.சென்னை டாப்7,821 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,02,771 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,43,57,568 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் மேலும் 123 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.ஈரோடு, சேலம்கோவை 110 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. 

தமிழகத்தில் கோரோனோ தொற்று குறைவான மாவட்டம் பட்டியலில் தென்காசிமாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் அடியோடு சரியும் கொரோனா பாதிப்பு.தென்காசி மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
 

Tags :

Share via