சைபர் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

by Editor / 15-12-2021 12:03:38am
 சைபர் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
அதன் தொடர்ச்சியாக சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றப்பிரிவு சார்பாக இன்று தென்காசி தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக எந்தெந்த வழியாக குற்றங்கள் (Facebook, Instagram, Share chat, KYC Scam, OTP Fraud and Trading Related Fraud) நடைபெறும் என்பது பற்றியும் அதிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிராக நடந்து வரும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், அதிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும்  அங்குள்ள தகவல் பலகையில் சைபர் கிரைம் மோசடி குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றம் குறித்தும் புகார் அளிக்கும் தொடர்பு எண் (1098,181,14417,155260) மற்றும் இணைய முகவரி (http://cybercrime.gov.in) அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

 

Tags :

Share via