இன்றைய ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 525

by Editor / 20-12-2021 11:28:35am
இன்றைய  ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 525

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் காற்றாலை மின் உற்பத்தி இருந்து வருகின்றது.மேலும் தமிழகத்தின் பல பழுதிகளையும் இணைத்து  8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.மேலும் காற்றாலை மின் உற்பத்தி ஏரளமான பகுதிகளில் விரிவடைந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 525 மெகாவாட்டாக உள்ளது.
 

 

Tags :

Share via