ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்துமக்கள் கட்சியினர்.

by Editor / 25-09-2022 03:26:07pm
ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்துமக்கள் கட்சியினர்.

 இந்துக்களை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசாவை உடனடியாக தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தின் போது அவர்கள் ஊர்வலமாக வந்து ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் உருவ பொம்மை எரிக்க விடாமல் கைப்பற்றினர்.

 

Tags :

Share via