பிரபல  யூ டியூப்பா் வாசன் கைது

by Admin / 19-09-2023 09:40:06am
பிரபல  யூ டியூப்பா் வாசன் கைது

பிரபல  யூ டியூப்பா் வாசன் நேற்று முன்தினம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் அருகே வரும் பொழுது தான்ஓட்டி வந்த பைக்கை  வீலிங் செய்த பொழுது நெடுஞ்சாலை பக்கவாட்டு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது நண்பர்களின் உதவியோடு காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து சாகசம் புரிவதுமான செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததன் காரணமாக அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

பிரபல  யூ டியூப்பா் வாசன் கைது
 

Tags :

Share via