50 சதவீத சலுகை கட்டணத்தில் தென் மாவட்ட சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் கிசான் ரயில் சேவை

by Editor / 30-12-2021 11:33:28pm
 50 சதவீத சலுகை கட்டணத்தில் தென் மாவட்ட சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் கிசான் ரயில் சேவை

சிறு குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சலுகை கட்டணத்தில் ரயிலில் அனுப்ப "கிசான் ரயில்" போக்குவரத்து திட்டம் 2020 - 21 ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், குடைமிளகாய், கேரட், காலிஃபிளவர், பச்சை மிளகாய், வெள்ளரி, பட்டாணி, பூண்டு, பீன்ஸ் போன்ற காய்கறிகள் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, எலுமிச்சை, அண்ணாசி, மாதுளை, பேரிக்காய், கிவி, லிச்சி போன்ற பழ வகைகள் ஆகியவற்றை 50 சதவீத சலுகை கட்டணத்தில் சிறு குறு விவசாயிகள் கிசான் ரயில் மூலம் அனுப்ப முடியும். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் அதிகமாக விளையக் கூடிய விவசாய விளைபொருட்கள் தேவைப்படும் மாநிலங்களானபீகார், டெல்லி, அசாம், திரிபுரா போன்றவற்றிற்கு  கிசான் ரயில் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தமிழக தென் மாவட்ட விவசாயிகளையும் சென்று சேரும் வகையில் ஒரு மாதகால பிரச்சார திட்டத்தை மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான கிசான் ரயில் சேவை துண்டு பிரசுரங்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் வியாழக்கிழமை அன்று மதுரையில் வெளியிட்டார். முதல் பிரதியை  முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா பெற்றுக் கொண்டார். நிகழ்வின்போது கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், உதவி வர்த்தக மேலாளர் கே.வி. பிரமோத் குமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பிரசார திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாவூர்சத்திரம் போன்ற பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 50 சதவீத சலுகை கட்டணத்தில் தென் மாவட்ட சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் கிசான் ரயில் சேவை
 

Tags :

Share via