இறைவனுக்கு விருப்பமான 8 எட்டு விஷயங்கள்

by Editor / 16-09-2022 08:32:41am
இறைவனுக்கு விருப்பமான  8 எட்டு விஷயங்கள்

இறைவனுக்கு பிடித்த இந்த எட்டு விஷயங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவர் கடைபிடித்து வருகிறாரோ அவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது.

சில விஷயங்கள் செய்து முடித்த பிறகு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நமக்கு தோன்றும்  செய்யும் முன்னமே அதை ஏன் யோசித்துப் பார்ப்பதில்லை.

இந்த எட்டு பண்புகள் இறைவனுக்கு ரொம்பவும் பிடித்த விஷயங்களாக இருக்கிறது

இறைவனின் அருள் பெற வாழ்க்கையில் உங்களை யாரும் வெல்லாமல் இருக்க இந்த எட்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

1. அகிம்சை:

அகிம்சை  எவரையும் துன்பப்படுத்தாமல் கத்தி கூச்சலிடாமல் அமைதியான முறையில் போராடுவது அஹிம்சையாகும்.  

மனம்  மொழி மெய்  ஆகிய இம்முன்றால் எவருக்கும் தீங்கு இழைக்காமல்  எப்போதும் அமைதியான வழியில் நடந்தால்  இறைவனுக்கு பிடிக்கும். 

2. இந்திர ஜபம்:

இந்திர ஜபம் என்பது ஐம்புலன்களையும் அடக்குதல் ஆகும்  நம் உடம்பில் இருக்கும் ஐம்புலன்களும் அடக்கி ஆள கற்றுக் கொண்டால்   நம்மை இன்னொருவர் அடக்கி ஆள்வதை தவிர்க்கலாம்.

கண்  காது  மூக்கு  வாய் மெய்  ஆகிய இந்த ஐந்து புலன்களையும் மனிதன் அடக்கி தவம் புரிந்தால்.இறைவனுடைய அருள் மட்டும் அல்ல  இந்த உலகமே நம் வசப்படும்.

3. தைரியம்:

எவ்வளவு துன்பங்கள் நம்மை நெருங்கினாலும் 
துன்பத்தைக் கண்டு கலங்காமல் தைரியமாக இருந்தால்   இறைவனுக்கு ரொம்பவும் பிடித்தமானவராக நாம் இருப்போம்  எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை கைவிட்டு விடக்கூடாது.

4. பொறுமை:

பொறுத்தார் பூமி ஆள்வார் என்னும் பழமொழியை மறந்து விடக்கூடாது.இந்த காலத்திற்கு அதெல்லாம் ஒத்து வராது   என்று நினைப்பது தவறு.

பிறர் செய்யும் தீமையை நாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டால்   அவர்களைப் போலவே நாமும் தீமை செய்யாமல்  என்ன செய்ய வேண்டும்  என்கிற தெளிவான சிந்தனை கிடைக்கும்  இதனால் சரியான வழியும் பிறக்கும்.

5. சவுசம்:

தீய சிந்தனைகள் கெட்ட விஷயங்களை  மனதில் இருந்து ஒழித்து கட்டி விட வேண்டும் உடல் மற்றும் மனம் இரண்டுமே தூய்மையாக வைத்திருப்பது சவுசமாகும்   உடலாலும் மனதாலும்  ஒருவர் தூய்மையாக இருக்கும் பொழுது தான் .இறைவனுக்கு அவரை மிகவும் பிடித்துப் போகிறது.

6. அத்ரோகம்:

அத்ரோகம் என்பது ஒருவர் வேண்டுமென்றே நாம் கோபப்பட வேண்டும்,என்று சில விஷயங்களை தூண்டி விடுவார்கள்,அவர்களின் எண்ணம் அறிந்து அதற்கு இடம் கொடுக்காமல்,கோபப்படாமல்,நிதானமாக இருப்பதை அக்ரோகம் என்று கூறுவார்கள் வேண்டுமென்றே தூண்டி விடப்படும் கோபம் மோசமானது.எனவே அக்கோபத்தை தெரிந்தே நாம் வெளி காட்டினால் ? நமக்கு இறைவன் நிறைய துன்பங்களை கொடுப்பார்.

7. நாணம்:

நாணம் என்பது வெட்கத்தை குறித்தாலும்.இந்த இடத்தில் வெட்கம் என்பது தவறான செயல்களை செய்வதில் இருக்க வேண்டும் கொஞ்சம் கூட கூச்ச நச்சம் இல்லாமல் தவறுகளை செய்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பது எதிர்மறை விஷயமாகும்,எனவே கெட்ட செயல்களை செய்யும் பொழுதே வெட்கப்படும் பண்பு இறைவனுக்கு உரியதாகும்.

8. சத்தியம்:

எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேச வேண்டும்  எந்த சூழ்நிலையிலும் நம்முடைய எண்ணம் மற்றும் பேச்சு அனைத்தும் உண்மையை பின்பற்றி நடக்க வேண்டும் அப்பொழுது தான் இறைவனுக்கு நம்மை பிடிக்கும்.

நாம் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை நம் உடலில் இருக்கும் பஞ்சபூதங்கள் மூலமாக இறைவன் நம்மை கண்கானிக்கிறான்.ஆகவே முதலில் பஞ்சபூதங்கள் மேல் பயம் கொள்ளுங்கள்.
 

 

Tags :

Share via