50 சதவீத சானிடைசர்கள் கொரோனாவிற்கு எதிராக திறனற்றவை- புதிய ஆராய்ச்சி முடிவுகள்

by Admin / 05-08-2021 03:33:48pm
50 சதவீத சானிடைசர்கள் கொரோனாவிற்கு எதிராக திறனற்றவை- புதிய ஆராய்ச்சி முடிவுகள்



கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசத்துக்கு அடுத்தபடியாக சானிடைசர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

50 சதவீத சானிடைசர்கள் கொரோனாவிற்கு எதிராக திறனற்றவை- புதிய ஆராய்ச்சி முடிவுகள்

கொரோனா பரவல் அதிகரித்தாலும், ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. மெதுவாக பல துறைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை. சுத்தமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் தான், கொரோனாவில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கும் சிறந்த வழி என்று கூறலாம்.
 
வெளியிடங்களுக்கு போகும்போது தொற்று பரவாமல் இருக்க, கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, நமது கைகளை அடிக்கடி சோப்பு நீரினால் சுத்தம் செய்யுங்கள் அல்லது ஆல்கஹால் உள்ள சானிடைசரை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசத்துக்கு அடுத்தபடியாக சானிடைசர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சோப்பு நீர் தான் சானிடைசரை விட சிறந்தது என வல்லுனர்கள் கூறுகின்றனர். அது கைகளில் உள்ள கிருமிகளை அகற்றுவதோடு, கைகளில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு ஆகியவற்றையும் போக்குகிறது.

சானிடைசர் கொரோனா வைரஸை கொல்லும் என்றாலும், சருமத்தில் வியர்வை அல்லது ஈரம் இருந்தால், அது சானிடைசரை நீர்த்து போக செய்வதால், அது திறன்பட செயல்படாமல் போகும் வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வெளியாகி உள்ள ஆய்வுகளின்படி சந்தையில் கிடைக்கும் சானிடைசர்களில் 50 சதவீத சானிடைசர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக திறனற்றவை என்று முடிவுகள் வெளியாகி உள்ளன. 50 வெவ்வேறு சானிடைசர் பிராண்டுகளை வைத்து 1050 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. சானிடைசர்களில் பொதுவாக 75 சதவீத ஆல்கஹால் இருக்கவேண்டும். அப்படி இல்லாத சானிடைசர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக செயலாற்றவில்லை. இந்த ஆய்வில் ஆல்கஹால் கலக்காத சானிடைசர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

 

Tags :

Share via