சாலையில் வாகனங்களில் வலம்வந்தவர்களை அழைத்து அறிவுரை கூறி கேக் வெட்டி மகிழ்ந்த எஸ்.பி.

by Editor / 01-01-2022 12:56:18am
சாலையில் வாகனங்களில் வலம்வந்தவர்களை அழைத்து அறிவுரை கூறி கேக் வெட்டி மகிழ்ந்த எஸ்.பி.

இன்று நாடெங்கிலும் புத்தாண்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது, தென்காசி நகரத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் உள்ளிட்டவைகளில் வாலிபர்கள் மற்றும் இளைஞர்கள் சுற்றக் கூடாது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட போலீசார் இரவு ரோந்துப்பணியில்  பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி  புதிய பேருந்து நிலைய பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வுகளை மேற்கொண்டார்.பின்னர்  சரியாக 12 மணியளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை அழைத்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்டவர்களை அழைத்து புத்தாண்டு கொண்டாடும் விதமாக பனிரெண்டு மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் இந்த அணுகுமுறை வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிகழ்வில்  தென்காசி காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

சாலையில் வாகனங்களில் வலம்வந்தவர்களை அழைத்து அறிவுரை கூறி கேக் வெட்டி மகிழ்ந்த எஸ்.பி.
 

Tags :

Share via