காங்கிரஸில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்

by Staff / 16-12-2023 04:12:27pm
காங்கிரஸில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1380 நன்கொடை வழங்கி உள்ளார். மேலும், பாஜகவை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள் என அவர் X வலைதளத்தில் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில், எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை என அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via