இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

by Admin / 05-01-2022 12:16:07pm
இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது.

இந்த மாத்திரையை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும்.கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும். 

இந்த மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து, வினியோகம் செய்யவுள்ளது.
 
இதேபோன்று, இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும்.  இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும்.  கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும்.

இந்த மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து, வினியோகம் செய்யும். 

அடுத்த வாரம் இந்தியா முழுவதுமுள்ள மருந்து கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


 

 

Tags :

Share via