யானையை அடித்து  துன்புறுத்திய இளைஞர்கள் கைது 

by Editor / 06-05-2021 05:39:32pm
யானையை அடித்து  துன்புறுத்திய இளைஞர்கள் கைது 



திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருவது வழக்கம். இந்த யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள மலைவாழ் மக்கள் கருதுகின்றனர். இதனால் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் யானைகளை அவர்களே வனப்பகுதிக்குள் விரட்டும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன் யானைக்கூட்டம் ஒன்று அப்பகுதிக்குள் வந்துள்ளது. யானைகளை பார்த்ததும் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கற்கள் மற்றும் கம்புகளால் அவற்றை தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஆபத்தை சிறிதும் உணராமல் யானைகளின் வாலை பிடித்து இழுத்து அதைத் துன்புறுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். கற்களால் அடிபட்ட குட்டி யானைகள் வலி தாங்காமல் பிளிறவே, அதைக் கண்டு கோபமடைந்த தாய் யானை இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்துவதும், யானையிடம் சிக்காமல் இருக்க இளைஞர்களும் சிறுவர்களும் ஓட்டம் பிடித்து மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via