ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு தீவிரம் பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

by Editor / 08-01-2022 02:23:25pm
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு தீவிரம்   பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

இந்திய வானிலை ஆய்வு மையம், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் மோசமான வானிலை காரணமாக இரு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையத்தின் அறிவிப்பின் படி, ஜம்மு-காஷ்மீர், இன்றும் நாளையும் அதிக மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,
ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக, பள்ளத்தாக்கில் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சீரற்ற வானிலையால், நாளை விமான போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பள்ளத்தாக்கில் உள்ள மக்களை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கள் பாதுகாபை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.பள்ளத்தாக்கு பகுதிகள், குல்மார்க், சோன்மார்க், பகல்காம், காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள சுற்றுலா பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பனிப்பொழிவு கானப்பட்டது. தற்போது சிறிது குறைந்துள்ள நிலையில், வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு, நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via