தேனீக்கள் கொட்டியதில் 15பேர் காயம்:

by Editor / 08-01-2022 10:17:03pm
தேனீக்கள் கொட்டியதில் 15பேர் காயம்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா,குச்சனூர் அருகே உள்ள கூழையனூர் கிராம மேற்குபகுதியில் உள்ள மல்லிங்ககோவில் ஒட்டியபகுதியில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைபார்த்து கொண்டிருந்தனர்.வேலைபார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததை அப்பணியாளர்கள் கவனிக்கவில்லை.திடீரென்று தேனீக்கள் தங்களது கூட்டை கலைத்து பறக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக 100 நாள் வேலை பார்த்துக்  கொண்டிருந்த பணியாளர்களை தேனீக்கள் கொட்டியதால் மக்கள் களைந்து நாலாபுறமும் சிதைந்து ஓட ஆரம்பித்தனர்.தேனீக்கள் கொட்டியதில் 15 நபர்களுக்கு லேசான காயத்துடன், தேனீக்கள் கொட்டிய இடத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்தனர்.தற்செயலாக அவ்வழியே வந்த 108 ஆம்புலன்ஸை வழிமறித்த மக்கள் வலியால் துடித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவத்தால் கூழையனூர் பகுதி முழுவதும் சிலமணி நேரம் பரபரப்புக்கு உள்ளானது.தக்க சமயத்தில் அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

Tags :

Share via