கர்ப்பிணிப் பெண்கள் பணி நியமனம் விவகாரம்:நிறுத்தி வைக்க எஸ்.பி.ஐ. வங்கி முடிவு

by Editor / 29-01-2022 04:34:43pm
கர்ப்பிணிப் பெண்கள்  பணி நியமனம் விவகாரம்:நிறுத்தி வைக்க எஸ்.பி.ஐ. வங்கி முடிவு


மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில் சேர்வதற்கு தகுதியற்றவர்கள் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட எஸ்.பி.ஐ. வங்கி இதனை தற்போது நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில் சேர்வதற்கு தகுதியற்றவர்கள் என வழிகாட்டு நெறிமுறைகளை  எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டது.இது பாரபட்சமானது. சட்டத்திற்கு புறம்பானது. சட்டம் வழங்கும் மகப்பேறு சலுகைகள் பாதிக்கப்படும் என டெல்லி மகளிர் ஆணையம் தலைவர் ஸ்வாதி மலிவால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும், பெண்களுக்கு எதிரான இந்த விதியை திரும்பப்பெறுமாறு டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி எ.பி.ஐ., மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை புதிதாக வேலையில் சேர்க்க வேண்டாம்.அவர்கள் புதிதாக வேலையில் சேர தகுதி பெற்றிருந்தாலும், சேர்க்க வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், அந்த பெண் தற்காலிகமாக தகுதியற்றவர். குழந்தை பிறந்து நான்கு மாதம் கழித்து வேலையில் சேரத் தகுதியானர் ஆவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.கடுமையான எதிர்ப்புக்களை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை என்ற உத்தரவை நிறுத்தி வைக்க எஸ்.பி.ஐ. வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : Employment of pregnant women: SBI to suspend Bank decision

Share via