லஞ்சம் கேட்ட விவகாரம் உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்

by Admin / 04-02-2022 03:03:26pm
லஞ்சம் கேட்ட விவகாரம் உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்


யூ டியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
 
இதற்கிடையே, பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்தார்.

இந்நிலையில், பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சகல வசதிகளை வழங்க லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியான நிலையில், சிறைத்துறை டி.ஜி.பி. சுனில் குமார் சிங் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
 

 

Tags :

Share via