ஜோ பைடன் அழைப்பு அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும்

by Admin / 08-02-2022 12:11:36pm
ஜோ பைடன் அழைப்பு அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும்

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்,  வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், அத்தியாவசிய தூதர்களைத் தவிர உக்ரைனில் உள்ள அமெரிக்க நாட்டு மக்கள் வெளியேறுமாறு அழைப்பு விடுத்தார்.  
 
இதையடுத்து உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அத்தியாவசிய பணியாளர்களை தவிர மற்ற பணியாளர்களும், தூதர்களின் குடும்ப உறுப்பினர்களும் நாடு திரும்ப அமெரிக்க வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. 

இதனிடையே மாஸ்கோவில் உள்ள  கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த பேச்சுவார்த்தை ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் சூழலை உருவாக்க உதவும் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்

ரஷ்ய ராணுவ அச்சுறுத்தலால் உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க மக்கள் வெளியேறுவது புத்திசாலித்தனமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via