தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் 27ஆம் தேதி வரை வறண்ட வானிலை .

by Editor / 24-02-2023 08:21:45am
தமிழ்நாடு, புதுச்சேரி  பகுதிகளில்  27ஆம் தேதி வரை வறண்ட வானிலை .

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via