.அரசியலில் வியூகங்களும் ராஜதந்திரங்களும்தான் வெற்றிகளைப்பெற்றுத்தரும்

by Admin / 24-02-2023 08:12:59am
.அரசியலில் வியூகங்களும் ராஜதந்திரங்களும்தான் வெற்றிகளைப்பெற்றுத்தரும்

அ.தி.மு.கவிலிருந்து நீக்கியது செல்லும் என்று ஒ.பி.எசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்துஅவரின் அரசியல் வாழ்க்கை கேள்வி குறியாக மாறியுள்ளது.சிவில் வழக்குகள் தொடர்பாக அவர் உயர்நீதிமன்றங்களில்தாக்கல் செய்திருக்கும் வழக்குகளை நடத்தலாம் என்று தீர்ப்பு சொல்லப்பட்டதோடுஉச்சநீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.அ.தி.மு.கவின் பொதுக்குழுவைக்கூட்டி எடுக்கப்பட்டதீர்மானங்கள் செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராகத்தேர்ந்தெடுக்கப்பட்டது.அவைத்தலைவர் நியமனம்உள்ளிட்ட அனைத்தையும் ஏற்றக்கொண்டதாலும் கட்சி அலுவலகம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாலும் ஒ.பி.எஸ் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாலும் அவரின் முயற்சிகள் இனிசெயலற்றுப்போகும் என்பதுதான்அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. எதிர்த்து போராடுவது எந்தவிதத்திலும்சாத்தியமாகாது.உச்சபட்ச அதிகாரமுடைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு வேறு எங்கும் சென்று முறையிடமுடியாதுஎன்கிறநிலையில் தன் ஆதரவாளர்களுடன் தனித்த அமைப்பை உருவாக்கி    அரசியலைத் தொடரலாம்.இல்லை,டி.டி.விதினகரனுடன் இணைந்து பணிகளைத்தொடரலாம். தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை சமூக மக்களின் ஆதரவை  பெறும்  முயற்சியில் இறங்கினாலும்  கூட ..இப்பொழுது  அ.தி.மு.கவில் அவர் சார்ந்த சமூகத்தினர் பெரும்பாலோர்     இருப்பது  பின்னடைவை  தரலாம். ஏனெனில் ,அ.தி.மு.க. எங்கிற  பலமான எதிர்க்கட்சி...அதன் சின்னம்
அதை  சார்ந்தே  சாதாரண மக்கள்  பின் தொடர்வர் .அரசியல் சார்பு  பலமிக்க அரசியல் இயக்கத்திற்கு முன்னால் செல்வாக்கு இழந்து போகும். அரசியலில்  வியூகங்களும் ராஜதந்திரங்களும் தான் வெற்றிகளைப் பெற்றுத்தரும்.காத்திருப்புக்குப் பின்னால்...நீண்ட மெளனத்திற்கு பின்  ஒரு வெற்றி வரவேண்டும்.அதுவராது  போனால் அரசியல் பயணம் அர்த்தமற்றுப் போகும்.

 

Tags :

Share via