உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலகியதாக ரஷ்யா ஏமாற்றுகிறது

by Admin / 17-02-2022 01:37:36pm
உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலகியதாக ரஷ்யா ஏமாற்றுகிறது

உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுவதாகவும்  எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் துறை செயலாளர் ஜென் சாகி  உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இன்னும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

டான் பாஸ் புதைகுழி பற்றிய அறிக்கை போன்றவை உக்ரைணுக்குள் உடுப்பூர்வதற்கான   சாக்குபோக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். 

எல்லையில் இருந்த படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா கூறுவது அமெரிக்க நம்பவில்லை என்றும் அச்சுறுத்தும் வகையில் எல்லையில்ரஷ்யா படைகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via