ராணுவ வீரர்களை அனுப்புகிறது டென்மார்க்

by Admin / 25-02-2022 01:44:48pm
ராணுவ வீரர்களை அனுப்புகிறது டென்மார்க்

உக்ரைன் மீது ரஷியா நேற்று போர் நடவடிக்கையை தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

தலைநகர் கீவ்-ஐ பிடிக்கும் நோக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய வாய்ப்புள்ளது. பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. லுத்வேனியா, போலந்து நாடுகள் உக்ரைன் எல்லையில் உள்ளன. பெலாரஸ் நாட்டையடுத்து லிதுவேனியா, லாத்வியா உள்ளது. ரஷியா எல்லையில் எஸ்டோனியா உள்ளன.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேட்டோ அமைப்பில் உள்ள சிறிய நாடுகள் தங்களது பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த வகையில் டென்மார்க் சுமார் 200 ராணுவ வீர்களை எஸ்டோனியா அனுப்ப இருக்கிறது.
 
நேட்டோ படையில் தங்களது பங்களிப்பை அதிகரிக்க வீரர்களை அனுப்ப இருப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு எஃப்-16 போர் விமானங்களையும் அனுப்ப இருக்கிறது. மார்ச் மாதம் தொடக்கத்தில் வீரர்கள் நேட்டோ படையுடன் இணைவார்கள் என டென்மார்க் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முடிவிற்கு பாராளுமன்ற ஒப்பதல் தேவை. அரசு அதற்கான உத்தரவை கேட்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள டென்மார்க் தயாராகி வருகிறது.
 

 

Tags :

Share via