உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை.

by Editor / 25-02-2022 01:52:57pm
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை.

மதுரை தெற்கு வாசல் பாப்பன் கிணறு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பங்கஜனாபன் மற்றும் வில்லாபுரத்தை சேர்ந்த சஜூவ்குமார்  ஆகியோர் உக்ரைன் நாட்டில் ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங் 2018 -ம் ஆண்டிலிருந்து படித்து வருகிறார்கள். தற்போது இறுதியாண்டு கல்லூரி படிப்பை முடித்து இந்தியா திரும்ப வேண்டிய நிலையில் உக்ரைன் நாட்டில் போர் ஆரம்பித்து ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால். மாணவர்களை பத்திரமாக மீட்க  கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பங்கஜ்னாபன் அப்பா, அம்மா தனது மகன் கடந்த இரண்டு தினங்களாக இரவு எங்களிடம் போனில் பேசி வந்தார். நேற்று இரவு போனில் பேசிய போது அவர் தங்கியிருக்கும் இடம் அருகே குண்டு மழை பொழிவதால் போன் டவர் எதுவும் சரிவர கிடைக்கவில்லை அதனால் வேறொரு இடத்திற்கு நாங்கள் சென்ற பிறகு உங்களிடம் பேசுகிறேன் என கூறியதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.  அதோடு  இந்தியாவை சேர்ந்த 150 மாணவர்களுடன் ஒரு மாணவர் விடுதியில் தங்க வைத்துள்ளதாக கூறினான். அதன்பிறகு இப்போதுவரை அவனை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தனது மகனைப் பத்திரமாக தமிழக முதல்வர் அவர்களும், பாரதப் பிரதமர் அவர்களும் மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும் இவனைப் போல் இந்தியாவிலிருந்து அங்கு படிக்கச் சென்ற அனைவரையும் மீட்டுத்தர அவர்கள் உதவி புரிய வேண்டும் என கூறினார்.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை.
 

Tags : Parents demand the release of students stranded in Ukraine.

Share via