பட்டா மாறுதலுக்காக ரூபாய் 4000 லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் இடைத்தரகர் கைது

by Editor / 10-09-2022 05:08:29pm
பட்டா மாறுதலுக்காக ரூபாய் 4000  லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் இடைத்தரகர் கைது

ஈரோடு அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக  அலுவலரையும்  இடைத்தரகரையும்  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதலுக்காக எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் அணுகியபோது அவர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .செல்வராஜா அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு அலுவலகத்திற்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த பணத்தை பெறும் போது கிராம நிர்வாக அலுவலர் கைது செய்தனர். தரகராக செயல்பட்ட பாலகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via