ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ரத்து செய்தது அமெரிக்கா

by Admin / 09-03-2022 03:50:37pm
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி ரத்து செய்தது அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் எரிவாயு இறக்குமதி தடை செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் இருந்து பேசிய ஜோ பைடன் ரஷ்யாவில் இருந்து வரும் அனைத்து பெட்ரோலிய எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு கூட்டு நாடுகள் ஆதரவு அளிக்க முடியாத சூழல் இருப்பதை புரிந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றில் இல்லாத கடினமான பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்ததுவருவதாகவும்  அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார மையத்தின் மீது தாக்குதல் தொடரப்பட்டு இருப்பதாக ஜோ பைடன் கூறினார்.

உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு எதிர் கட்சியினர் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகள் சவால்கள் இடையிலும் இந்த முடிவை அரசு அறிவித்துள்ளது.

இந்த தடை மூலம் ரஷ்யாவில் இருந்து வரும் எந்த எண்ணை கப்பலுக்கும் அமெரிக்க துறைமுகங்களில் அனுமதி கிடையாது என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

விஜயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபரின் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதுவரை ஒரே ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலமாக உரை நிகழ்த்திய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து இறுதிவரை போராடுவோம் என்று உறுதிபட தெரிவித்தார்.

வானத்தின் மீது எதிரிகள் பறக்காமல் இருக்க பிரிட்டனின் வான்பரப்பில் விமானங்கள் தடை செய்யுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை  ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார் 

 

Tags :

Share via