தஞ்சை மாணவி திருச்சியில் தற்கொலை

by Staff / 04-01-2023 04:54:54pm
தஞ்சை மாணவி திருச்சியில் தற்கொலை

தஞ்சையை சேர்ந்த மாணவி திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது சித்திக் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது மகள் அப்ரீன் பாத்திமா (வயது 21) திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மாணவிகள் பலர் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்குச் சென்று இருந்த நிலையில் கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவி தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் தோழிகளிடம் பேசிவிட்டு விடுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அப்ரின் பாத்திமா தங்கி இருந்த விடுதி அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மற்ற தோழிகள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மின்விசிறியில் அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து விடுதி வார்டன் அமல்பேகத்திடம் மற்ற மாணவிகள் தெரிவித்தனர். மேலும் கே. கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo