செஸ் வீராங்கனைக்கு மிரட்டல்

by Staff / 04-01-2023 04:44:10pm
செஸ் வீராங்கனைக்கு மிரட்டல்

ஈரானில் ஹிஜாப் அணிவதர்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து அந்நாட்டு வீரர்கள் ஹிஜாப்பிற்கு எதிராக குரல் கொடுத்தப்படி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை சாரா காதெம் கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். தற்போது போட்டி முடிந்த நிலையில், அவர் நாட்டிற்கு திரும்பக்கூடாது என பலரும் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

 

Tags :

Share via