வைக்கோல் விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

by Admin / 03-08-2021 03:02:15pm
வைக்கோல் விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு


   
உலர் தீவன தட்டுப்பாடு காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வைக்கோலை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு கால்நடை வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில் பால் உற்பத்திக்காக அதிக அளவு கறவை மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு சரிவிகிதமாக பசுந்தீவனம், உலர் தீவனம் வழங்குவது அவசியமாகும்.

தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு தரிசு நிலங்கள் பசுமைக்கு மாறியுள்ளதால் பசுந்தீவனத்துக்கு தட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

ஆனால் வைக்கோல், மக்காச்சோள தட்டு உட்பட உலர் தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதி கால்நடை வளர்ப்போர், அமராவதி அணை பாசன பகுதிகள் மற்றும் பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வைக்கோல் வாங்கி வருவார்கள்.

ஆனால் தேவைக்கேற்ப இப்பகுதியில் வைக்கோல் கிடைப்பதில்லை. எனவே காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். தற்போது கும்பகோணம் சுற்றுப்பகுதியில் இருந்து வைக்கோல் கட்டு ஒன்று ரூ.220க்கு வாங்கி வருகின்றனர்.

கால்நடைகளுக்கான உலர் தீவனம் மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டு வருகிறோம். சீசன் சமயங்களில் பிற மாவட்டங்களில் இருந்து உலர் தீவனத்தை கூட்டாக இணைந்து வாங்கி வருகிறோம்.

 வியாபாரிகளும் டெல்டா மாவட்டங்களில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வைக்கோலை கொண்டு வந்து இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். எனவே கால்நடைத்துறை சார்பில் மானிய விலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றனர்

 

Tags :

Share via