மான் வேட்டை 2 பேர் கைது

by Editor / 27-02-2022 05:14:23pm
மான் வேட்டை 2 பேர் கைது

திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானை வேட்டையாடிய கொண்டம் கிராமத்தை சேர்ந்த படையப்பா என்பவரும் மானை வாங்க வந்த தீபக் ராஜ் என்பவரும் கைதாகியுள்ளனர். துப்பாக்கிகளுடன் தப்பியோடிய கொண்டம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், சீனு ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

Tags : 2 arrested for deer hunting

Share via