மோடி-ஜோபைடன்- ஸ்கார்ட் மோரிசன்-புமியோ கிஷிடோ 4 நாட்டு தலைவர்கள் ஆலோசனை

by Admin / 03-03-2022 02:55:04pm
மோடி-ஜோபைடன்- ஸ்கார்ட் மோரிசன்-புமியோ கிஷிடோ 4 நாட்டு தலைவர்கள் ஆலோசனை

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. 

குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர்.
 
இந்த நிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இன்று காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்து மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதனால் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் பரிமாறிக் கொள்வார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via