கொரோனா நிவாரணம்,  மளிகைப் பொருள்கள் 25க்குள் வழங்க உத்தரவு 

by Editor / 23-06-2021 05:36:19pm
கொரோனா நிவாரணம்,  மளிகைப் பொருள்கள் 25க்குள் வழங்க உத்தரவு 



கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உடனடியாக முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.இதையடுத்து ஜூன் மாத தொடக்கம் முதல் இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூன் 25ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இரண்டாம் தவணை மற்றும் மளிகைப் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via