எழுவர் விடுதலையில் எங்களால்  முடிவெடுக்க முடியாது மதுரை  நீதிமன்றம் கருத்து 

by Editor / 17-08-2021 04:04:14pm
எழுவர் விடுதலையில் எங்களால்  முடிவெடுக்க முடியாது மதுரை  நீதிமன்றம் கருத்து 


எழுவர் விடுதலையில் நீதிமன்றத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேர் சிறையில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் தன்னை விடுதலை செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் அளித்திருந்த மனுவில், 7 ஆண்டுகள் 10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் அரசு தலையீட்டால் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலேயே இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது.

20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் வழி வகுக்கிறது. ஆனால் 29 ஒன்பது ஆண்டுகளாகியும் சிறையில் இருக்க தன்னை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்த நளினியின் மனுவை தள்ளுபடி செய்ததால் இவரது மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக முதல்வர் அனுப்பியுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via