ரஷ்யாவின் மாஸ்டர் பிளானுக்கு அடி கொடுத்த சிங்கப்பூர்

by Admin / 10-03-2022 11:22:25am
ரஷ்யாவின் மாஸ்டர் பிளானுக்கு அடி கொடுத்த சிங்கப்பூர்

மார்ச் 10 அன்று  இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், புடினின் போர் செயலைக் கண்டித்தது போர் தொடங்கியது முதலே பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை, எண்ணெய் வணிகத்திற்குத் தடை, ஏறுமதி இறக்குமதி என பல தடைகளை விதித்தது. 

அதனால் ரஷ்யா மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்திக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இது எதற்கும் கலங்காத புடின் தடைகளைக் கண்டு அஞ்சுவதற்கு பதிலாக தன் மீது தடை விதித்த நாடுகளின் மீது அவரும் பல்வேறுத் தடைகளை விதிக்கத் தொடங்கி உள்ளார்.

இப்படி செய்தால் ரஷ்யா மீண்டும் 1998 ஆம் வருடம் சந்தித்த அதே மாதிரியான ஒரு பெரும் பொருளாதார சரிவினை சந்திக்க நேரிடும் என்ற பேச்சுக்களும் எழுகின்றது. 

இவ்வளவு நடந்தும் புடின் ஏன் பேசாமல் இருக்கிறார் என்ற கேள்வியும் எழும். மேலும், இவற்றை எல்லாம் யோசிக்காமலா புடின் இவ்வளவு பெரியா போரை தொடுத்திருப்பர் அவருக்கு தெரியாததா என்ற கருத்துக்களும் அதிகமாகவே நிலவுகிறது. அதுவும் சரி தான், புடின் எல்லாவற்றிக்கும் ஒரு மாஸ்டர் பிளான் வைத்து இருப்பர் போலும்...

இவ்வளவு பெருளாதாரத் தடைகளைக் கண்டு அஞ்சாமல் இருக்க காரணம் ரஷியாவிற்கு முன்பே இது மாதிரியான ஒரு அனுபவம் உண்டு. கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய போதே அமெரிக்கா ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது, அப்போதும் ரஷியா பெரும் இழப்புகளை சந்தித்தது. 

அதே போன்ற ஒரு நிலை தான் இப்பொது வந்துள்ளது. ஆனால் ரஷியா அப்போது இருந்தது போல இல்லாமல் அதன் பொருளாதாரத்தை சரியாகக் கையாள, கையில் எடுத்துள்ள ஆயுதம் கிரிப்டோ கரன்சி.. டிஜிட்டல் கரன்சி மூலமாக வெளிநாட்டு நிதிகளை ரஷ்யாவால் எளிதில் கையாள முடியும். வங்கிகளை போல கிரிப்டோ கரன்சி தளங்களை கட்டுப்படுத்த முடியாது. 

மேலும் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் தனி நபரிடம் எளிதில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அப்படி செய்த பரிமாற்றத்தினை அழிக்கும் தொழில்நுட்பத்தையும் ரஷியா வைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ரஷியா தனக்கான சொந்த டிஜிட்டல் கரன்சியையும் திட்டமிட்டுள்ளது.

ஆக, இதன் மூலம் ரஷ்யாவின் பரிவர்த்தனை எப்போதும் போல இருக்கலாம். இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உடன் டிஜிட்டல் கரன்சி மூலம் வர்த்தகம் செய்ய விரும்பும் எந்தவொரு நாட்டுடனும், சர்வதேச வங்கி முறைக்கு வெளியே பரிவர்த்தனைகளை நடத்த ரஷ்ய நிறுவனங்களை இது அனுமதிக்கும் எனவும் ரஷ்யாவின் மத்திய வங்கி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் ரஷ்யாவின் இந்த மாஸ்டர் பிளானுக்கு அடி கொடுக்கும் விதமாக  சிங்கப்பூர் ரஷ்யா மீது அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்தனைகளுக்கும், சில வங்கிகள் மீதும் தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் சிங்கப்பூர் வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ தடை உள்ளிட்ட அனைத்து பரிமாற்ற வழிகளையும் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் பரிமாற்றம் செய்வதையும், வர்த்தகம் செய்வதையும் தடை செய்யும். குறிப்பாக சிங்கப்பூரின் மத்திய வங்கியானது (MAS), கிரிப்டோகரன்சிகள் மற்றும் NFT போன்ற டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகளையும் கட்டுப்படுத்தியுள்ளது.

அது மட்டும் அல்லாமல் சிங்கப்பூரின் மத்திய வங்கியானது பல ரஷ்ய வங்கிகளின் சொத்துகளை முடக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இதில் விடிபி பைனான்ஷியல் இன்ஸ்டிடியூசன் பேங்க் ரோஷியா உள்ளிட்ட வங்கிகள் அடங்கும். சிங்கப்பூரின் இந்த நடவடிக்கையால் ரஷ்யா டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்ய முடியாது என்ற நிலையில், இது ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியாக அமையலாம் என யூகிக்கப்படுகிறது.

 

Tags :

Share via