மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

by Editor / 11-03-2022 12:08:03am
மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

 தினந்தோறும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன ; நமது மனதுக்கும் . உடலுக்குமிடையே ஒரு சரியான நல்ல இணைப்பு ஏற்படுகிறது.
அது எது போன்றதென்றால் , நாம் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால் , அந்த நேரம் வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவே தோன்றுகிறதல்லவா ? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தூங்கச் செல்கிறோமென்றால் , அந்த நேரம் வந்தவுடன் நமக்குத் தூக்கமும் வந்துவிடுகிறதல்லவா ? அது போன்றுதான் நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம் செய்வதென்பதுமாகும். அந்த நேரம் வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்ய நம்மைத் தூண்டும்.

இவ்விதம் குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால் நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்து வலுப்பெற்று – நாம் நல்ல ஆன்மிக முன்னேற்றமும் காண முடிகிறது.
விடியற்காலை , நண்பகல் , மாலை சந்தியாகாலம்,நடு இரவு ஆகியவை ஜபம் செய்வதற்குரிய மிகவும் விசேஷமான காலங்கள்.
அந்த நேரங்களில் இயற்கையானது சலனமின்றி , அமைதியாக இருப்பதால் , நாம் ஜபம் செய்வதற்குச் சாதகமாக நமது மனதிலும் அமைதியும் , சாந்தமும் நிலவுகிறது.
இவற்றைத் தவிர பௌர்ணமி , அமாவாசை , அஷ்டமி , ஏகாதசி திதிகளோடு கூடிய நாட்கள் , மற்ற விசேஷ பூஜை தினங்கள் ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும் சிறந்தவையாகும்.
மந்திரத்தை உச்சரிப்பதில் மூன்று நிலைகள் இருக்கின்றன.
முதல் நிலையில் மந்திரம் நமது தொண்டை, நாக்கு, உதடுகள் ஆகியவற்றால் சற்று உரக்கவே சொல்லப்படுகிறது.
இரண்டாவது நிலையில் நமது தொண்டையும் , நாவும் , உதடுகளும் சிறிதளவு லேசாக அசைய மனதினால் பிரதானமாக ஜபம் செய்கிறோம்.
மூன்றாவது நிலையில் தான் ஆன்மாவும் ( நினைவு முழுவதும் ) இணைந்து அதுவே ஜபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ; இதிலும் மனமும் உடலும் ஆன்மாவுடன் இணைந்து செயல்படுகின்றன.
ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதற்கென்று தனியான ஒலி , சீர் இருப்பதால் – ஓதும் மந்திரத்தை ஒருவன் சரியான முறையில் உச்சரித்தால் அது அவன் உள்ளத்தில் சில தெய்வீக அதிர்வுகளைத் தோற்றுவித்து , அந்த மந்திரத்தின் தெய்வத்தையும் அவன் அறிய உதவுகிறது.சரியான முறையில் உச்சரிக்கவில்லை யென்றாலோ தேவையான பலனும் கிடைக்காது.

ஒரு மந்திரத்தின் சக்தி அதன் ஒலியிலேயே இருப்பதால்தான் . மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது .
ஒரு மந்திரம் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் . தவறான உச்சரிப்பு ஆன்மிக முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும். ஒரு பெண்மணி மந்திரதீட்சை வாங்கியிருந்தாள் அவள் உபதேசமாகப் பெற்ற மந்திரத்தின் ஒரு பகுதி ‘ ருக்மிணி -நாதாய ‘ என்பதாகும் . ஆனால் அவளோ ‘ ருக்மிணி ‘ என்று சொல்லாமல் ‘ ருக்கு . ருக்கு என்றே சொல்லி வந்தாள் . அதனால் அவளுடைய ஆன்மீக முன்னேற்றம் தடைப்பட்டது . ஆனால் கடவுள் கிருபையால் பிறகு அவளுக்குச் சரியான மந்திரமும் கிடைத்தது என்று அன்னை ஸ்ரீசாரதாதேவியார் கூறியுள்ளார்.
எண்ணிக்கை : பொதுவாக ஒரு குரு தனது சீடனை தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம் செய்யும்படி உபதேசிக்கிறார்.
ஜபத்தை எண்ணிக் கணக்கிடுவதை விரல்களின் மூலமாகச் செய்யலாம் ; அல்லது ஒரு ஜப மாலையைக் கொண்டு செய்யலாம் . அல்லது மனதிற்குள்ளேயே செய்யலாம்.
ஜபமாலை சாதகனின் மனதை ஒருமுகப் படுத்துவதற்கு உதவி செய்கிறது .

ருத்திராட்சம்,சந்தனம்,இலந்தை , தாமரைக்கிழங்கு , ஸ்படிகம் , பவழம் போன்றவற்றால் ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.
ஜபிக்கும் மந்திரத்தை பொருத்தே . உபயோகிக்கும் ஜபமாலை 108 அல்லது 54 மணிகளைக் கொண்டதாகும்.
ஒருவர் உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்கக் கூடாது.மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தையே ஒரு மாலையின் மூலம் ஜபிக்கவேண்டும் .
ஒரே மாலையின் மூலம் வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்கவும் கூடாது .
உருத்திராட்ச மணி -துளசி மணி – ஸ்படிக மணி-மிளகு-சந்தன மணி -நவரத்தின மாலை போன்றவைகள் இக்கலையின் வளர்ச்சிக்கு சித்தி செய்வதற்கு தேவையான ஒன்றாகும்.இதில் எந்த ஒரு மணியும் வைத்துக் கொள்ளலாம் . சந்தனமாலை, நவரத்தின மாலை என்பது ஜபத்திற்கு ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை . இவைகளை எப்போதும் கழுத்தில் அணியலாம் . உருத்திராட்ச மாலை சிவதீட்சை பெற்றவர்கள் எப்போதும் அணியலாம் . இதே போல் துளசி மாலை விஷ்ணு பெருமானின் முத்திரைப் பெற்றவர்கள் எப்போதும் அணியலாம்.ஸ்படிக மணி சாதாரணமாக யாரும் போடலாம்.
ஜபம் செய்வதற்கு உருத்திராட்சம் – துளசி – மணி சிறந்தது இதில் 

25 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் முக்தி தரும்.

35 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் தனலாபத்தை தரும்

 

Tags :

Share via