அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்-முதலமைச்சர்.

by Editor / 11-03-2022 12:42:48pm
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்-முதலமைச்சர்.

தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாட்டின் இரண்டாம் நாளில் முதல்வர் உரை:

மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும்.எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது, அது மஞ்சளா இருக்கலாம், இயற்கை வளங்கள் ஆக இருக்கலாம் அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது அரசுக்கு வருமானம் பெறுவது குறித்து விவசாயிகள் ,தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து கருத்துக்களை ஆட்சியர் தெரிவிக்க வேண்டுமென கேட்டு கொண்டார் . 
நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம் என்று கூறிய முதல்வர் அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை கேட்பதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.


 

 

Tags : The people are the masters-chief minister to the politicians and officials.

Share via