ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு

by Admin / 05-08-2021 03:40:38pm
ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு



வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் வென்றது.

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு விஜய் வசந்த் எம்.பி. பாராட்டு
விஜய் வசந்த்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஹாக்கி  வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் விறுவிறுப்பாக விளையாடி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கி போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
 
இந்திய ஆடவர் ஹாக்கி அணி

வெற்றி பெற்ற இந்திய அணியை பாராட்டி குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via